Friday, April 22, 2016

IT - தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்


தகவல் தொழில் நுட்பம் - தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்

தகவல் தொழில் நுட்பம் அதன் தனித் தன்மையை இழந்து வருவது அனைவரும் அறிந்ததே.

பொருளாதார போட்டிகள்

உலகெங்கிலும் பொருளாதார முரண்பாடுகளாலும், உலகமயமாக்கல் காரணமாகவும் வளர்ச்சி பெற்றது தகவல் நுட்பத் துறை. மேல் மட்டத்தில் இருக்கும் தலைவர்களாலும், போட்டி காரணமாகவும்   வியாபார நெறிமுறைகள் அனைத்தும் களைந்து போட்டி ஆரம்பம் ஆகிறது.

உதாரணமாக தொடர்ந்து 5 வருடங்களாக ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்துடன்    வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கலாம். அதில் 10% அதிகரித்து ஒவ்வொரு வருடமும் வியாபாரம் நடக்கும்.

புதியதாக சந்தையில் நுழையும் ஒரு நிறுவனம் வியாபாரம் பெருகுவதற்காக முன் குறிப்பிட்ட நிறுவனத்துடன் மிக குறைவான விலை குறிப்பிட்டு வியாபாரத்தில் பங்கெடுக்கும்.

இதில் இரண்டு பொருளாதார பாதகங்கள்

·         முதல் நிறுவனம் தனது 5 வருட வியாபார வாழ்வினை இழந்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் அதில் வேலை பார்ப்பவர்கள்,

·         இரண்டாவதாக புதியதாக சந்தையில் நுழைந்த நிறுவனம் இதில் ஏற்படும் குறைக்கப்பட்ட பண பரிமாற்ற அளவிற்காக இருக்கும் தனது ஆட்களிடம் மிக அதிக வேலை பளுவினை அதிகரிக்கும்.

உதாரணத்திற்கு கீழ் கணக்கினை எடுத்துக் கொள்வோம்.

முதல் நிறுவனம் வியாபாரம்

முதல் வருடம்          110000
இரண்டாம் வருடம்       121000
மூன்றாம் வருடம்        133100
நான்காம் வருடம்         146410
ஐந்தாம் வருடம்         161051


ஐந்தாவது வருடத்தில் இரண்டாவது நிறுவனம் தனது வியாபாரம் ஆரம்பிப்பதாக கொள்வோம்.

'சார், நீங்க நம்ம கம்பெனிக்கு 100000 குடுங்க, உடனே வியாபார ஒப்பந்தம் போட்டு விடலாம்' என்பார்கள்.

இவ்வாறான பொருளாதார போட்டிகள் இரு நிறுவனங்களில் இருந்தும் ஆட்களை குறைத்து பெரும்பாலானவர்களை வீட்டுக்கு அனுப்புகின்றன.

மற்ற துறைகளில் இது இல்லையா என்பவர்களுக்கு - தகவல் தொழில் நுட்ப துறை சார்ந்த பொருளாதார போட்டிகள் கைப்புண் கண்ணாடியாக இருக்கின்றன.

தொடரும்...


புகைப்படம் : Karthik Pasupathi

No comments:

Post a Comment